Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…நட்பு வட்டம் விரிவடையும்…அலைச்சல் அதிகரிக்கும்…!

கடக ராசி அன்பர்களே …!    இன்று செயல்பாடுகளின் தீவிரத்தால் செல்வ வளம் பெருகும். புதிய திட்டங்களை அமல் படுத்தினால் லாபம் கூடும். அழகுபெண்கள் நட்பு வட்டமும் உங்களுக்கு கிடைக்கும். எந்த ஒரு வேலையும் செய்யும் பொழுது கூடுதல் கவனத்துடன் செய்வது மட்டும் நல்லது. செலவுகள் அதிகரித்தாலும் வரம்பு இருக்கும். முடிந்தால் சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் போன்றவை ஏற்படலாம். பண பரிவர்த்தனையில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். உடல் சோர்வு அவ்வப்போது வந்து செல்லும். வீண் பிரச்சனைகள் தலை தூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனத்தாங்கல் ஏற்படலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டுத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உச்சத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் அதிகரிக்கும்.

காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் கொஞ்சம் பேச்சுவார்த்தையில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். முக்கியமான பணியை  மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |