கடக ராசி அன்பர்களே …! விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவு எடுப்பதாக இருக்கும். விரோதிகள் விலகிச் செல்வார்கள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். இன்று அரசியல்வாதிகள் பாடுபட வேண்டி இருந்தாலும் மிகவும் நன்றாகத்தான் செயல்படுவார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். அதே போல அவர்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
பார்த்துக் கொள்ளுங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கூடுமானவரை ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உணவை உட்கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும். புதிதாக கடன்கள் எதுவும் இப்போதைக்கு வாங்க வேண்டாம்.
உங்களுடைய வசீகரமான பேச்சு இன்று புதிதாக காதல் வயப்படும் கூடிய சூழலை ஏற்படுத்தும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டடால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.