கடக ராசி அன்பர்களே …! இன்று கணவன் மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நிற்கும். தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். சொந்தங்களால் பிரச்சனைகள் கூட வரக்கூடும் யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளைத் தாண்டித்தான் முன்னேறி செல்ல வேண்டி இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது. பிள்ளைகளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். அவர்கள் மதிப்பதும் மனதிற்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் தேவையற்ற வீண் குழப்பம் வந்து செல்லும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களில் சிலர் நாடி வரக்கூடும். உத்தியோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே கொடுக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
புதிய முயற்சிகளில் மட்டும் இப்போதைக்கு தள்ளிப் போடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஸ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.