கடக ராசி அன்பர்களே …! எந்த நிலையிலும் சிறப்பு கவனம் வேண்டும். என்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். செயல்பாடுகளில் வரக்கூடிய தடைகளை கண்டு துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் திருமண சுப பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பூசல்கள் அதிகரிக்கும். பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
குழந்தைகளின் மூலம் மனம் மகிழும் படியான சூழல் கொஞ்சம் உருவாகும். நண்பர்களிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். பழைய பிரச்சனைகளை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்காமல் கொஞ்சம் கவனமாகவே பேசிப் பழகுவது நல்லது. கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும் புதிதாக ஏதும் வாங்க வேண்டாம். செல்வாக்கு ஓரளவு கூடும். பெற்றோருக்குப் பெருமை எதிர்பார்த்த நல்ல பலன்கள் ஓரளவுதான் கிடைக்கும். இன்று இறை வழிபாடு செய்யுங்கள்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரியிடம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பொறுமையாக பேசுவது ரொம்ப ரொம்ப நல்லது. இன்று யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். காதலர்கள் என்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.