Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…நிதானம் தேவை…அலைச்சல் உண்டாகும்…!

கடக ராசி அன்பர்களே …!  இன்று உங்களின் பேச்சு செயலில் முரண்பாடு கொஞ்சம் ஏற்படலாம். ஆலோசனை நன்மை பெற உதவும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக இறை வழிபாட்டுடன் காரியங்களில் செயல்படுங்கள். உங்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். எந்த வித பிரச்சனைகளிலும் தயவுசெய்து தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொருமையாக தான் செல்ல வேண்டும். தொழில் வியாபாரத்திற்காக இன்று நீங்கள் அலைய வேண்டியிருக்கும். அளவான மூலதனமே தொழில் போதுமானதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரம் நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள்.

வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டால் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். காதலர்கள் கண்டிப்பாக என்று பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்:  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |