கடக ராசி அன்பர்களே …! தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே மறைமுக மன வருத்தம் இருக்கும். என்று பல வகையிலும் நல்ல பலன்கள் உங்களை தேடி வரக்கூடும். பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மனதில் சுய நம்பிக்கையை அதிகரிக்க கவனமாக பேசுவது மட்டும் எப்போதுமே நல்லது. வீண்பழி மற்றவர்கள் சுமத்துவார்கள் எதிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். உறவினர்களுக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும் கவனம் இருக்கட்டும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கொடுக்கல் வாங்கலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மற்றவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும். இன்று காதலுக்கு இனிய நாளாக அமையும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்.