கடக ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய பிடிவாத போக்கை தயவு செய்து மாற்றிக் கொள்ள வேண்டும். உறவினர்கள் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்தாருடன் இன்று மகிழ்ச்சிகரமாக சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள். வியாபாரத்தை புதிய இடத்திற்கு மாற்ற சிந்தனை எழும்.
மேலும் குடும்பத்தில் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து செல்லும். சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். பேசும்போது யாரைப்பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. தயவுசெய்து இன்று யாரையும் நீங்கள் குறை சொல்ல வேண்டாம். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். பணவரவில் சிறிய தாமதம் இருக்கும் கவலை வேண்டாம்.
உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். செரிமானம் போன்ற பிரச்னைகள் இருக்கக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்க மேற்கொள்ள இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் எப்பொழுதுமே உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்