கடக ராசி அன்பர்களே …! இன்று மனசஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம். அரசு மூலமாக நடக்க வேண்டிய காரியங்களுக்கு பிறகே நடந்து முடியும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். போர் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.
வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். குடும்பத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். இன்று அக்கம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத வாக்குவாதத்தில் எப்பொழுதுமே ஈடுபடவேண்டாம். காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும்.
நிதானமாக செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ள வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று புதன் கிழமை என்பதால் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.