Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… காதலர்களுக்கு இனிமை இருக்கும்… காதலில் வெற்றி பெறுவீர்கள் …!!

கடக ராசி அன்பர்களே …! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் கொஞ்சம் பகை ஏற்படாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும், கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்துகொண்டிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து, எந்த ஒரு காரியத்தையும் செய்வது நல்லது. பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள், ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

உறவினர் வகையில் உன்னதமான சூழல் ஏற்படும். வெளி   இடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிக்கலாமா என்று எண்ணங்கள் மேலோங்கும், இருந்தாலும் இப்ப இருக்கக் கூடிய சூழ்நிலையில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள் . வீண் அலைச்சலும் அவ்வப்போது வந்து செல்லும். மாலை நேரங்களில் உடலை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள், மிக சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு இன்று இனிமை காணும் அழகாக இருக்கும், காதலில் வெற்றி பெறக் கூடிய சூழலும் இருக்குங்க.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |