கடக ராசி அன்பர்களே …! சுப விரயங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். இனிய செய்தி இல்லம் தேடிவரும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் சில வேலைகளில் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. எல்லோரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை கொடுக்கும்.
பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாகப் பேசுவதும் ரொம்ப நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாடிக்கையாளரிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். அவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். அதேபோல மற்றவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.
இன்று காதலர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பேசினால் போதும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்,
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.