கடக ராசி அன்பர்களே …! இன்றைய நாள் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறையால் ஆதாயம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீண் அலைச்சல் ஆகியவை அதிகரிக்கும். வீண் விவாதங்களைத் தயவு செய்து தவிர்க்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
அடுத்தவரை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. உங்களுடைய கடமையில் கவனம் செலுத்துவதும் ரொம்ப நல்லது. குடும்ப கஷ்டங்கள் ஓரளவு நீங்கும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் நட்பால் ஆதாயம் ஏற்படும். ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
காதலர்களுக்கு இன்று நாள் இனிமையான நாளாக காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.