கடக ராசி அன்பர்களே …! இன்று மனதில் நல்ல சிந்தனை உண்டாகும். நிழுவை பணிகளை நிறைவேற்ற புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு கொஞ்சம் ஏற்படலாம். பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக பேசுங்கள்.
தேவையில்லாத விஷயங்களுக்கு பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்கமுடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவருடைய கல்வி பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். சரியான நேரத்தில் அதற்கான முடிவுகள் கிடைக்கும். நிதானமாக செயல்பட வேண்டும்.
இன்று காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக் கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.