கடக ராசி அன்பர்களே …! இன்று இறை வழிபாட்டுடன் காரியங்களைச் செய்யுங்கள். அனைத்து காரியங்களும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும். பொது நலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலில் வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம்.
சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதே போல சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் கண்டிப்பாக உடல் நிலையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் நீங்கள் கவனமாக தான் இருக்க வேண்டும்.
புதிதாக முதலிடுகள் ஏதும் செய்ய வேண்டாம். புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.