கடக ராசி அன்பர்களே …! இன்று பல வகையிலும் வருமானம் வந்து குவியும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் எழும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றியும் உண்டாகும்.
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். இடம் வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்கு சாதகமான சூழல் இன்று இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. கலைத் துறையை சார்ந்தவர்கள் ஓரளவு முன்னேறி வரக்கூடிய சூழல் இருக்கும். யாரிடமும் தயவுசெய்து கோபப்பட்டு மட்டும் பேச வேண்டாம்.
பேசி பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். முக்கியமாக காதலர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்மஞ்சள் நிறம்.