Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…ஆசைகள் நிறைவேறும்…வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்…!

கடக ராசி அன்பர்களே….!    இன்று சிரமங்களை நீங்கள் தாமதமின்றி சரி செய்ய வேண்டும். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் என்று கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது.

பேச்சிலும் நிதானமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் கூறுவதை பெற்றோர்கள் கூர்ந்து கவனித்து அவரிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போட்டிகள் ஓரளவு சாதகமான பலனையே கொடுக்கும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். இலட்சியங்கள் கைகூடும். மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் இருந்தால் காரியத்தில் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.

எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். காதலர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |