Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மன குழப்பம் உண்டாகும்…பாராட்டுகளை பெருவீர்கள்…!

கடக ராசி அன்பர்களே….!    இன்று சிலரது பேச்சு உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம். பணியில் அக்கறை கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். முக்கிய செலவுக்காக சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். உறவினர்கள் நண்பர்களின் வருகை இருக்கும்.

செய்தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய சொல்லை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள். மற்றவர்களுக்காக சில முக்கியமான உதவிகளையும் செய்து கொடுப்பீர்கள். அதனால் அனைவரும் உங்களை பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். மனம் மட்டும் கொஞ்சம் அலைபாய்ந்து கொண்டிருக்கும் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயத்திற்காக மன குழப்பம் அடைய வேண்டாம்.

காதலர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த வித பிரச்சனையும் சிக்கிக் கொள்ள வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |