கடக ராசி அன்பர்களே….! இன்று நீங்கள் எதிர்பார்காவிட்டாலும் உங்களுடைய உடன்பிறப்புகள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். நல்ல நண்பர்களை இன்று நீங்கள் பெறுவீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக ஒருவர் கொடுப்பார். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு துணைபுரியும்.
உச்சத்தில் இருப்பவர்கள் பணிபுரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக இயந்திரங்களை இயக்கும் போது கவனம் வேண்டும். மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். மனதில் குழப்பம் ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.