Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…முயற்சி கைகூடும்…நம்பிக்கை கூடும்…!

கடக ராசி அன்பர்களே….!   இன்று தெய்வீக நம்பிக்கை கூடும் நன்றாக இருக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். அன்னிய தேசத் தொடர்பு அனுபவத்தை கொடுக்கும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலனையே கொடுக்கும். மாணவர்களுக்கு இன்று பாடம் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கொஞ்சம் கடினமாக இருக்கலாம். அது போலவே கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் முயற்சியால் வெற்றி காண முடியும். இன்று ஆதாயம் சீராகவே இருக்கும். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாக தான் இருக்கும். இருந்தாலும் உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுங்கள்.

காதலர்கள் எந்த விதத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |