கடக ராசி அன்பர்களே …! இன்று தனவரவும் மன திருப்தியும் ஏற்படும். மகிழும் நாளாக இருக்கும். புதிய பதவிகள், வாகனம் வசதி வாய்ப்புகள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்பீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனையே காண்பீர்கள். உங்களுடைய செயல் திறனால் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். இன்று கொஞ்சம் பொறுமையாக சில விஷயங்களை மேற்கொள்ளுங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கூட ரொம்ப பொறுமையாகவே செல்லுங்கள் வேகம் வேண்டாம். காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும் கூடுமானவரை வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபடவேண்டாம்.
அதேபோல உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்.