கடக ராசி அன்பர்களே….! இன்று நம்பிக்கைகள் கூடும் நாளாக இருக்கும். வரவு திருப்தி தரும் சூழல் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர் நலனில் செலுத்திய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். அரசு தொடர்பான பணியில் சாதகமான போக்கு ஏற்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடைகளும் நீங்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும்.
பல வகை முன்னேற்றங்களும் இன்று இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொண்டு பேசுவது ரொம்ப நல்லது. அதேபோல மனைவியிடம் ஆலோசனை கேட்டு முக்கியமான பணியை செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. இன்று உடல் ஆரோக்கியத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
இன்று காதலர்களுக்கும் எந்த விதத்திலும் பிரச்சனைகள் ஏதும் இருக்காது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.