கடக ராசி அன்பர்களே….! இன்று உங்களுடைய பேச்சு மற்றவரை சங்கடப் படுத்தும் வகையில் இருக்கும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் செயல்பட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாரான தான் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். அதிகம் பயன்படாத பொருட்களை தயவுசெய்து விலைக்கு வாங்க வேண்டாம். சீரான ஓய்வு உடல் நலம் பெற உதவும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இன்று யாருக்கும் வாக்குறுதிகள் ஏதும் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். அதுமட்டுமில்லாமல் இன்று புதிதாக கடன் வாங்க வேண்டாம். குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படுவது ரொம்ப நல்லது. பிள்ளைகள் மூலம் பெருமை இருக்கும். புத்தி சாதுரியத்தால் பொருட்சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். நீண்ட நாட்களாக எடுத்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்து முடியும்.
மனநிம்மதி கிடைக்கும். இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.