கடக ராசி அன்பர்களே….! இன்று எந்த ஒரு விஷயத்திலும் கண்டிப்பாக தெளிவு வேண்டும். மனதில் ஏதோ ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டிருப்பீர்கள். தேவை இல்லாத விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். நினைத்தது நிறைவேறுவதற்கு கண்டிப்பாக இறைவன் அருள் வேண்டும். கூடுமானவரை மனதை அமைதியாக வைத்துக் கொண்டு இறை அருளை பரிபூரணமாக பெறுங்கள். மிக உயர்ந்த பொருட்கள் மீது கவனமாக இருங்கள்.
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக தான் செயல்பட வேண்டியிருக்கும். வாக்குறுதிகள் ஏதும் வேண்டாம் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். அது போலவே மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். புதிதாக கடன் ஏதும் வாங்க வேண்டாம். எதிர்ப்புகள் கொஞ்சம் தலை தூக்கும். பணவரவு சீராக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது ரொம்ப நல்லது. சாமர்த்தியமாக சில காரியங்களையும் செய்வீர்கள்.
பொது நலக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று காதலர்களுக்கு ஓரளவு சிறப்பு காணும் நாள் ஆக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.