Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…நிம்மதி குறையும்…வாக்குவாதங்களை தவிர்க்கவும்…!

கடக ராசி அன்பர்களே….!  இன்று உங்களுடைய பொருட்கள் அனைத்தையும் நீங்கள் பத்திரப் படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல்நிலையில் மிகுந்த அக்கறையும் ஏற்படும். குடும்பத்தில் கொஞ்சம் நிம்மதி குறையும். கணவன் மனைவிக்கு இடையே எதையும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்த்து அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களது வெற்றிக்கு உதவும். கல்வி பற்றிய பயம் மற்றும் இருந்து கொண்டே இருக்கும்.

காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாக இருக்கும். இருந்தாலும் எப்போதும் போலவே வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம். அதேபோல வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது கொஞ்சம் கவனம் குறைவாக இருக்காதீர்கள். செய்யும் செயலைத் தெளிவாக செய்ய வேண்டும். மனதில் குழப்பங்கள் இருந்தால் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவே முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது இன்று நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள். அவ்வப்போது கோபமும் தலைதூக்கும். நிதானம் இருந்தால் இன்றைய நாள் உங்கள் இனிமையாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |