Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…டென்ஷன் நீங்கும்…சிந்தனை அதிகரிக்கும்…!

கடக ராசி அன்பர்களே….!   தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் பெருகும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் இன்று ஒரே சிந்தனை செல்லும். இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிப்பதால் இறைவனுக்காக சிறு தொகையையும் செலவிட நேரிடும். குடும்பத்தில் இருந்த டென்ஷன் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும்.

குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவியும் கிடைக்கும். எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். எப்படிப்பட்ட வேலையையும் செய்து முடிப்பீர்கள். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவு உங்களுக்கு பெரும் மகிழ்ச்சி கொடுக்கும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மனம் நிம்மதியாகவே  காணப்படும். கொடுக்கல் வாங்கல் விஷயம் கூட ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

இன்று நீங்கள் மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் வெற்றி ஆகையால் இல்லத்தில் திருமணத்தை பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான தசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |