Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…சிந்தனை திறன் அதிகரிக்கும்… செயலில் வேகம் கூடும்…!

கடக ராசி அன்பர்களே….!   இன்று திட்டமிட்டு செயல்படுவதால் பணிகளில் உரிய நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகமான உழைப்பு அவசியமாக தேவைப்படும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். சுற்றுச்சூழலின் தொந்தரவினால் நித்திரை கொஞ்சம் கலையலாம். ஆகையால் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது.

மனம் உற்சாகமாக தான் இருக்கும் கவலை இல்லை. பயணத்தின் பொழுது ஏற்பட்ட தடங்கல்கள் நீக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக தான் நடக்கும். போட்டிகளுக்கு செல்லும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். இன்று எதிரிகளிடம் விளங்கி இருப்பீர்கள். இன்று உற்றார் உறவினர்களும் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். உங்களுடைய சிந்தனை திறனும் அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும்.

இன்று காதலர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |