Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மன வருத்தம் நீங்கும்…சுப காரியங்கள் நடைபெறும்…!

கடக ராசி அன்பர்களே….! இன்று உங்களுடைய குடும்ப தேவை அதிகரிக்கும். மற்றவரை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் ஏதும் தரவேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலவி பணி நிறைவேற்றுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். கண்களின் பாதுகாப்பில் கண்டிப்பாக கவனம் வேண்டும். முன் கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு சீராக இருக்கும்.

மாணவர்கள் இன்று மிகவும் கவனத்துடன் இருப்பது நல்லது. மற்றவரிடம் உரையாடும் போதும் கவனமாக தான் இருக்க வேண்டும். எதையும் சமாளிக்கும் திறமை இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்களில் மட்டும் கொஞ்சம் நிதானம் தந்தால் போதுமானது.

காதலர்கள் எந்த ஒரு இடத்திலும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பேசும்பொழுது கூர்ந்து கவனித்து அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |