கடக ராசி அன்பர்களே …! இன்று கண்டிப்பாக நீங்கள் நிதானத்தை கடைபிடித்து தான் ஆகவேண்டும். சிலர் உங்களை சங்கடப்படுத்த கூடும். வாழ்வில் சில சிரமங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும். கூடுமானவரை இன்று பொறுமையாகவும்,நிதானமாகவும் இறை வழிபாட்டுடன் காரியங்களை செய்யுங்கள். தொழில் வியாபாரம் ஓரளவு உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் செல்லும். உபரி பண வருமானம் இருக்கும்.
குடும்பத்தின் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். புதிய பதவிகள் கிடைக்கும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியத்தடை தாமதம் ஓரளவு நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றம் காணப்படும். சில நேரங்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களும் இருக்கும். காதலர் இன்று பொறுமை காக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
வாக்குறுதிகளையும் தயவுசெய்து இன்று நீங்கள் கொடுக்க வேண்டாம். பண விஷயத்தில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் உங்களுக்கு அனைத்து விதத்திலும் நன்மையை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: நீல மற்றும் பச்சை நிறம்.