கடக ராசி அன்பர்களே …! இன்று பணி முழு அளவில் உங்களுக்கு வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். உங்களுடைய கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது.
மாணவர்கள் இன்று எவ்வளவு பொருமையாக இருந்தாலும் கொஞ்சம் சில விஷயங்கள் கடினமாக தான் இருக்கும். மனதை தளரவிடாமல் நடந்து கொள்ளுங்கள் அது போதும். குடும்பத்தில் ஏதாவது சின்ன சின்ன பிரச்சனைகள் தலை தூக்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.உடல் வலி ஏற்படலாம் ஆகையால் கவனமாக இருங்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
உணவு வகைகளில் கண்டிப்பாக கவனம் வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.