Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…காரிய வெற்றி உண்டாகும்…!

கடக ராசி அன்பர்களே …!   இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மிக பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

திடீர் உடல்நலக் கோளாறு ஏற்படும். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவீர்கள். இன்றைய நாள் ஓரளவு அதிர்ஷ்டகரமான நாளாகவே இருக்கும். யோகம் கூடிவரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் வீடு தேடி வரும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மாலை நேரத்தில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |