Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…எதிர்பாராத சிக்கல் உண்டாகலாம்…எதிலும் பொறுமை அவசியம்…!

கடக ராசி அன்பர்களே …!  நண்பனின் செயலை தயவுசெய்து விமர்சிக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் வரலாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். பரம்பரை பாதுகாப்பை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் இன்று வரக்கூடும்.

பேசும் போது கண்டிப்பாக நிதானம் வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இன்று செயல்களை முன்பெ முடிவு செய்து கொள்ளுங்கள். அப்போது தான் அனைத்து விஷயங்களும் சரியாக வரும். கோபம் அவ்வப்போது தலைதூக்கும். பிள்ளைகளிடம் கூடுமானவரை அன்புடன் நடந்து கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வாக்குறுதியில் ஏதும் யாருக்கும் கொடுக்க வேண்டாம். அதேபோல பணம் நான் பெற்று தருகிறேன் என்று எந்தவித பொறுப்புகளையும் ஏற்று கொள்ள வேண்டாம்.

புதிய பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் வீண் விவாதங்கள் கொஞ்சம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்:  2 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |