Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…எதிர்ப்புகள் அகலும்…சிந்தித்து செயல்படுங்கள்…!

கடக ராசி அன்பர்களே …!    இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். அனைத்து விஷயங்களிலும் நன்மை ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்கள் மூலம் மன மகிழ்ச்சியும் ஏற்படும். தெய்வத்தின் அருளால் உங்களுடைய வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படும். அது உங்களுக்கு வெற்றிகரமாகவும், மனமகிழ்ச்சியும் கொடுக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரம் விருத்தியடையும்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் அகலும் பணவரவும் நல்லபடியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி ஏற்படும். கடினமான வேலைகளையும் இன்று நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகமாக செல்லும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.ஒரு முறைக்கு இரு முறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசித்து செய்யுங்கள்.

இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். உங்களுடைய காதலுக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

 

Categories

Tech |