கடக ராசி அன்பர்களே …! குடும்பத்தோடு மிகவும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். இனிமை தரும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். நல்ல வாகன யோகமும் நல்ல வருமானம் இருக்கும். உறவுகளின் சந்திப்பு அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நேரம் விழித்திருக்க மட்டும் வேண்டாம் தயவு செய்து சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் கூட வரலாம். கணவர் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் குறையும்.
வெளியூர் சென்று தங்கியிருந்து வேலை பார்த்தவர்கள் கொஞ்சம் கடுமையான சூழ்நிலையை சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருந்தாலும் சகோதரரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம். எந்த காரியத்திலும் தயவுசெய்து அலட்சியம் மற்றும் காட்டவேண்டாம்.
காதலர்களுக்கு இடையே இனிமையான நாளாக இருக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழலும் அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.