Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…மனக்கசப்பு நீங்கும்…உற்சாகம் அதிகரிக்கும்…!

கடக ராசி அன்பர்களே….!  இன்று உங்களுடைய மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி செல்லும். எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உதவி பெற அனுகூலம் உண்டு.குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகலாம்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் துணையின் எதிலும் கவனமாக இருங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். லாபம் கொட்டும், புதிய தொழிலால் நன்மை ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். இன்று ஓரளவு அதிர்ஷ்ட மிக்கதாகவே இருக்கும். பெண்களுக்கு யோகமான சூழல் அமையும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு கண்டிப்பாக உங்கள் கையில் வந்து சேரும்.

நீங்கள் நினைத்தது நடக்கும் நானாகத்தான் இருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயக பெருமானை வழிபட்டு அருளை பெறுங்கள் .

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |