Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…பிள்ளைகளால் பெருமை உண்டு…உற்சாகமான நாளாகும்…!

கடக ராசி அன்பர்களே …!    இன்று உங்களுடைய மனம் மகிழும் படியான பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் மற்றும் சேவை பணிகள் மேம்படும். பதவி உயர்வு ஏற்படலாம். பல வழிகளில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும். சுபகாரிய பேச்சுகள் நடக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகளும் கிடைக்கும்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும் சந்தோஷமாகவே காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். எந்த வேலையையும் எளிதாக பெண்கள் முயற்சித்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார்கள. உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதித்துக் காட்டுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது  நன்மையை கொடுக்கும்.

காதலர்களுக்கு இன்று உற்சாகமான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்தால் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |