கடக ராசி அன்பர்களே….! இன்று குடும்பத்தோடு செல்லும் குறுகிய தூர பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். சொகுசான புதிய வாகன யோகம் இருக்கும். தொழிலில் ஏற்படும் சில மாற்றங்களால் வருமானம் இருக்கும். ஆனால் இன்று நீங்கள் செய்யவேண்டியது யாருக்கும் கடன் ஏதும் கொடுக்க வேண்டாம். புதிதாக கடன் ஏதும் வாங்க வேண்டாம். அதே போல யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தையும் என்ன வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே சிறிய வாக்குவாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும். பிள்ளைகள் உங்களை நன்கு புரிந்து கொண்டு செயல்படுவார்கள். மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் ஓரளவு காரிய வெற்றி இருக்கும். வசீகரமான தோற்றம் அனைவரையும் கவர்வீர்கள். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கண்டிப்பாக கவனம் வேண்டும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது.
கூடுமானவரை அக்கம் பக்கத்திலும் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.