கடக ராசி அன்பர்களே …! இன்று நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானமும் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்தி சாதுரியம் அதிகரிக்கும்.
உத்தியோகத் துறையில் உள்ளவர்களுக்கும் எழுத்துத் துறையில் உள்ளவர்களுக்கும் அவருடைய திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். அதிர்ஷ்டகரமான சூழல் இன்று உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். இருந்தாலும் மாலை நேரங்களில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்