கடக ராசி அன்பர்களே …! இன்று முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாக இருக்கும். முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைபேசி மூலம் கனிவான செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்தபடி வருமானமும் கிடைக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்றுசேருவார்கள்.
வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எதிர்பார்த்த அரசு வேலையும் கிடைக்கும். நட்பால் ஆதாயம் ஏற்படும். செய்தொழில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் அமையும். இன்று கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். புதிதாக கடன்கள் மட்டும் ஏதும் வாங்க வேண்டாம்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.