கடக ராசி அன்பர்களே …! சிலர் சொல்லும் அறிவுரை சங்கடத்தை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளை பின்னொரு நாளில் தொடங்கலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் தான் இருக்கம். பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். ஆனால் கடுமையான பனியின் காரணமாக உடல் சோர்வு இன்று இருக்கும்.
கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். காதலர்களுக்கு இன்று அன்பு பொங்கும் நாளாக இருக்கும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து இப்போதைக்கு வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குரு பகவான் வழிபாட்டையும்,சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.