கடக ராசி அன்பர்களே …! இன்று பணிகளை மனதில் இருத்தி செல்பவர்கள் தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமங்கள் குறையும். பணம் வரவு முக்கிய செலவுகளுக்கு பயன்படும். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். பெண்கள் பிறருக்காக பொறுப்பை தயவுசெய்து இருக்க வேண்டாம். வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகலாம்.
இதனால் செலவும் ஏற்படும். நண்பர்களிடமிருந்து பிரிவு, உடல் சோர்வு போன்றவை உண்டாகும். தொழில் நிமிர்த்தமாக இடமாற்றம் ஏற்படும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் நீங்கள் எண்ண வேண்டாம் பொறுமையாக இருங்கள். நிதானமாக செயல்படுங்கள். யாரிடமும் தயவுசெய்து கோபம் கொள்ளாதீர்கள். இன்று காதலர்கள் கண்டிப்பாக கோபம் கொள்ளாமல் பேசுவது ரொம்ப நல்லது.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.