கடக ராசி அன்பர்களே …! தாமதங்களும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். சேமிப்புகள் கொஞ்சம் குறையலாம். கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப்பளு கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் பன்மடங்கு உயரும். பழைய பாக்கிகளும் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளால் டென்ஷன் அடையக்கூடும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். நிதானத்தை மட்டும் எப்பொழுதும் கைவிட வேண்டாம். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது ரொம்ப நல்லது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் நிதானம் கொள்ளுங்கள்.
காதலர்கள் பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். பொறுமையாக இருங்கள், அனைத்து விஷயங்களும் உங்களுக்கு நல்லபடியாக நடந்தேறும். முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.