கடகம் ராசி அன்பர்கள்…!! இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். பாதியில் நின்ற வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். நெருக்கமானவர்களிடம் இனிமையாக பேசி பொழுதைக் கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றத்தை பெறும்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு போட்டிகள் விலகிச்செல்லும், பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள், சக மாணவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாகவே செய்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்