Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…நம்பிக்கை கூடும்..ரகசியங்களை காத்திடுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று மனதில் சோம்பலும் நிறைந்திருக்கும். முக்கியமான பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை பிறரிடம் விவாதிக்க வேண்டாம். கூடுமானவரை எப்பொழுதும் நீங்கள் ரகசியங்களை தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள்.  பயணத்திட்டத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று ஆறுதல், வாக்கு, நம்பிக்கை கொடுக்கும்.

உறவினர்கள் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாகவே பழகுங்கள். தேவையான உதவிகள் ஓரளவே வந்து சேரும். பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கக்கூடும். அதில் கொஞ்சம் கவனத்தை செலுத்துங்கள். அதுபோலவே மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது ரொம்ப நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கிறது.

படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்,அனைத்து காரியமும்ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |