கடகம் ராசி அன்பர்களே, இன்று உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாகவே இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று எதிலும் தயக்கமும், பயமும் இல்லாமல் ஈடுபட்டு சிறப்பாக காரியங்களை செய்வீர்கள்.
பெரியவர்கள் மூலம் இன்று உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். பணம் தட்டுப்பாடு நீங்கும். மனக்குழப்பம் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர் பார்த்த வெற்றியும் கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுகட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டும். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.
கூடுமானவரை இன்று பொறுமையாக செயல்படுவது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள், ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்துக் கொண்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்