கடக ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டிர்கள். தொழில் வியாபாரத்தில், உற்பத்தி விற்பனை ரொம்ப சிறப்பாக இருக்கும். தாராள பண வரவில் சேமிப்பு சேர்ப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். இன்று கொடுக்கல் வாங்கல்களில் கவனம் இருக்கட்டும் அதிகம் பேசுவதை தவிர்த்து, செயல்களில் வேகம் காட்டுவது நல்லது.
அடுத்தவர் கூறுவதை செய்யும் முன்பு அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது.இன்று முன்னேற்றம் அடைவதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள், கவனமாக செயல்படுவீர்கள் புதியவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறலாம். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வணங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் சிறப்பான அனுபவத்தை இன்று நீங்கள் பெற முடியும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு