கடகம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாகவே இருக்கும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உறவினர்களால் விரயம் உண்டாகும். இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும், தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும்.
முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமான காரியங்களையும் இன்று திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும்.உங்களுடைய நிதி மேலாண்மை இன்று உயரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்