Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கடக ராசிக்கு”…. எதிர்ப்புகள் விலகி செல்லும்….லாபம் கிடைக்கும்…!!!!

கடக ராசி அன்பர்களே…!!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கலாம்.  தொழில் வியாபாரம் சீராக நண்பரின் உதவி கிடைக்கும். அளவான பணவரவு கிடைக்கும். நிர்பந்தத்தின்   பேரில் பொருள் வாங்க வேண்டாம். இன்று  மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சிகளை பெறுவார்கள், விளையாட்டு துறையில் வெற்றி கொள்வார்கள். எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், உழைப்பின் மூலம் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையும் கூடுதல் உழைப்பின் மூலம் தான் செய்து முடிக்க வேண்டியிருக்கும். மனம் ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.

இன்று  நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  3 மற்றும் 5

 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஊதா

Categories

Tech |