கடக ராசி அன்பர்களே…!!!! இன்று சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும்பொழுது விழிப்புணர்ச்சி தேவை. பிறர் மனதை புரிந்து கொண்டு செயல்படுவதால், பிரச்னைகள் அகலும். பயணங்களில் கவனம் இருக்கட்டும். இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகளும் கொஞ்சம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப்போக்கு ஏற்படாமல் , தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் கொடுப்பதாக இருக்கும். செலவு கொஞ்சம் கூடும. உங்களுடைய வாக்கு வன்மையால் காரிய அனுகூலமும் நல்லபடியாகவே நடக்கும். இன்று எதை தொட்டாலும் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, திருமண முயற்சி சிறப்பாக நடக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அணைத்து காரியமும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெளிர்நீலம்