கடகம் ராசி அன்பர்களே …!! இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில்பணி சுமை கூடினாலும் சக பணியாளர்கள் உங்கள் பணியில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபாரத்தில் விற்பனைலாபமும் கூடுதலாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.
கடித தொடர்புகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய முயற்சிகளை தாமதித்து செய்யவேண்டும். எதலும் நிதானமாக செயல்பட்டால் காரியத்தில் வெற்றி காணலாம். அவசரம் காட்டினால் நஷ்டம்தான் ஏற்படும். பொறுமையாக இருங்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களை எதிர்கொள்ளுங்கள். எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் கூடுமானவரை மனைவியிடம் ஆலோசனை கேட்டு செய்வது ரொம்ப நல்லது. இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை ரொம்ப சிறப்பாக உள்ளது.
இன்று காதலர்கள் தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்களின் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்