Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு…தன்னம்பிக்கை அதிகரிக்கும்..வாகனம் மூலம் செலவு ஏற்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மனோ தைரியம் கூடும்.

செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. வாகனங்களால் செலவு கொஞ்சம் இருக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து, வீண் அலைச்சலும் குறையும்.

ஆனால் பணியைப் பற்றிய சிந்தனை மட்டும் இருக்கும். இன்று  உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் இருக்கும், கவலை வேண்டாம். எந்தவித பிரச்சனைகளும் இன்றி துணிந்து நீங்கள் சமாளித்து விடுவீர்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக போராட வேண்டியிருக்கும். கல்வியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

விளையாடிவிட்டு கல்வியில் மட்டும் இன்று கவனத்தை செலுத்தினால் வெற்றி பெறமுடியும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |