Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சேமிப்பு இல்லை” ஊரடங்குக்கு பின் கடைகளை திறக்க வேண்டாம்….. யோகி பாபு கருத்து….!!

மூடிய மதுபான கடைகளை திறக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆகவே ஊரடங்கு முடிந்தபின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சொன்ன பூரண மதுவிலக்கை கருத்தில் கொண்டு, மதுபான கடைகளை தொடர்ந்து மூடியே வைத்திருக்குமாறு தமிழக அரசிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்தவகையில்,

நடிகர் யோகிபாபு இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஊரடங்கு காலகட்டத்தில் இன்று பலர் சேமிப்பு இல்லாமல் தவித்து வருவதற்கு முக்கிய காரணம் மதுபான கடைகளே. எனவே மூடிய மதுபானகடைகள் மூடப்பட்டதாகவே இருக்கட்டும். அதை திறக்க வேண்டாம் என யோகி பாபு கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |